ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் இன்னும் தீர்மானிக்கவில்லை

3548

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் சாட்சியங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய தனது உத்தியோகபூர்வ அறையில் வைத்து விசாரணை நடத்த தீர்மானித்ததாக கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று (23) திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மரணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருவதால், மரண விசாரணை சாட்சியத்தை தனிப்பட்ட முறையில் நடத்துமாறு உயிரிழந்தவரின் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

எனவே, சாட்சிய விசாரணையை தனது அலுவலகத்தில் நடத்த நீதவான் முடிவு செய்துள்ளார்.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிபுணர் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நீதவான் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை நீதிமன்றத்தால் கண்டறியப்படவில்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், இந்த மரண விசாரணை தொடர்பான சாட்சியங்கள் பரிசீலனை மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நடத்தப்பட்டது, அங்கு இறந்த தினேஷ் ஷாஃப்டரின், சகோதரரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here