follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுநீர் விளையாட்டு தொடர்பான பிரச்சனைகளை ஆராய குழு.நியமனம்

நீர் விளையாட்டு தொடர்பான பிரச்சனைகளை ஆராய குழு.நியமனம்

Published on

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி பணிப்புரையை வழங்கினார்.

சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்படவுள்ள இக்குழுவானது, குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கள விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.

பிரோட்லண்ட் நீர்மின் திட்டம் காரணமாக கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மேற்படி மக்கள், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய இந்த விளையாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...