“ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்”

200

மக்கள் கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் கருத்துகளை ஆராய வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்திருந்தார்.

“மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாடு தேர்தலுக்குள் நுழைந்துவிட்டது. தேர்தல் ஒரு ஜனநாயக செயல்முறை. இது புரிந்துகொள்ளத்தக்கது.

தற்போது மக்களின் கருத்து திரிபுபடுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் கருத்தை ஆராய வேண்டும். இது உள்ளூராட்சித் தேர்தல் என்றாலும், வாக்குப்பதிவு காரணமாக இது மிக முக்கியமான தேர்தல். ஆனால் தேர்தலை காணமுடியாத நிலையில் நிறைவேற்று அதிகார சபையினர் செயற்படுகின்றனர். நாட்டில் மீண்டும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க முற்பட்டால், அது இந்தத் தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையே கலைக்கச் செய்யும். கடந்த காலங்களில் தேர்தலை ஒத்திவைத்த கட்சிகளும் கலைந்தன. பொதுஜன பெரமுனவின் சில தலைவர்கள் இந்த நிலைமையை முன்வைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிர்வாகச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. உண்மையில் நடந்திருப்பது அமைச்சரவையில் சாராம்சம் போடாமல், சாராம்சமிட்டு போட்டு அனுப்பியது இது விளையாட்டல்ல. அமைச்சரவை செயலாளரிடம் போலி சாராம்சம் எழுதச் சொன்னது யார் என்று தெரியவில்லை. அமைச்சரவையில் விவாதிக்கப்படாத விடயம் அமைச்சரவை தீர்மானமாக எழுதப்பட்டால் அது பாரிய தவறு. அரசுக்கு எதிரான குற்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here