நுரைச்சோலை பற்றி எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு

332

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்திற்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலும் இரண்டு நிலக்கரி கப்பல்கள் இம்மாதம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் மற்றும் மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்குவது தொடர்பான கொள்கை மீளாய்வு நேற்று (24) இடம்பெற்றது.

மேலும், பெப்ரவரி மாதத்தில் மேலும் 07 நிலக்கரி கப்பல்களையும், மார்ச் மாதத்தில் 07 கப்பல்களையும், ஏப்ரல் மாதத்தில் 07 கப்பல்களையும் கொண்டு வருவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு அரச வங்கிகளிடமும் கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் கோரும் கடன் பணத்தை பெற்றுக்கொள்ளும் திறனின் அடிப்படையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை பெற்று குறைந்த வெட்டுக்களுடன் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here