follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசீனா இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கியுள்ளமை உறுதி

சீனா இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கியுள்ளமை உறுதி

Published on

சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக,சீன வெளிவிவகார அமைச்சு கூறியதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்வதால், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளை சீனா செய்து வருகிறது என்றும் சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“இலங்கை சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்வதால், இலங்கையின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு எங்களால் இயன்றவரை சீனா உதவி வருகிறது,” என வெளிவிவகார அமைச்சு ராய்ட்டர்ஸிடம் கருத்துரைத்துள்ளது.

முன்னதாக இந்த நிதியுதவி குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

LATEST NEWS

MORE ARTICLES

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...