follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுநவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும்

நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும்

Published on

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுதல், சேவை மற்றும் ஏற்றுமதி துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்துதல்,உள்நாட்டுக் கைத்தொழிலுக்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளைக் கொண்டு வருதல் மற்றும் முன்னணி தொழில்துறையினருடன் வலையமைப்பை ஏற்படுத்துதல் என்பன இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

சைபர் பௌதீக கட்டமைப்பு (Cyber-Physical Systems), இணையத் தகவல் ( (Internet of Things), இணைய சேவைகள் (105), ரோபோ தொழில்நுட்பம் ((Robotics), பாரிய தரவு (Big Data), கிளவுட் கணனி மற்றும் உற்பத்தி (Cloud Computing & Manufacturing), மேம்படுத்தப்பட்ட யதார்த்தம்(augmented reality) மேம்படுத்தப்பட் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற தொழில் நுட்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் என்பன இந்தக் கண்காட்சி ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.

பல்வேறு துறைகளினூடாக டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியை அடைவதன் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள சமூகப்படித்தரங்களைச் சேர்ந்த இனக் குழுக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கி, அதன் ஊடாக சமூகத்தை வலுப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...