follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉலகம்ரஷ்யாவிற்கு ரோபோக்கள், தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய தடை

ரஷ்யாவிற்கு ரோபோக்கள், தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய தடை

Published on

உக்ரைனில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குவதாக ஜெர்மனியும் அமெரிக்காவும் முடிவு செய்ததை தொடர்ந்து ரஷ்யா , உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பொருளாதாரத் தடைகளில், ரஷ்யாவின் இராணுவத் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை அதன் 49 நிறுவனங்களுக்கு அனுப்புவதை பிப்ரவரி 3 முதல் தடை செய்வதாக ஜப்பான் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பட்டியலில் பீரங்கிகள், எக்ஸ்ரே ஆய்வு கருவிகள், எரிவாயு ஆய்வுக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள், வெடிபொருட்கள் மற்றும் ரோபோக்கள் ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கின்றன.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...