இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு

2424

இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (chip) சேர்க்கப்படும் என்றும், உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த முறையை பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தலைமை அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நான்கு பிரதான கிளைகள் தவிர்ந்த 54 கிளைகள் நாடு முழுவதும் நிறுவப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here