follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉலகம்ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அம்பானி

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அம்பானி

Published on

கௌதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைவடைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த Hindenburg ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கௌதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின.

Reliance குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில், ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கௌதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...