75வது சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (04) காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
“நமோ நமோ தாயே – நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப் பொருளில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல கலாச்சார மற்றும் மத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.