சுதந்திர தினத்துடன் இணைந்ததாக தேசிய இளைஞர் திரைப்பட விழா

263

75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தேசிய தளத்தை உருவாக்கும் நோக்குடன் தேசிய இளைஞர் திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தியலான தேசிய இளைஞர் தளத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

‘எமது புதிய கதை” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த “தேசிய இளைஞர் திரைப்பட விழா” ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.

பாடசாலை மாணவர்களையும் இளைஞர் சமூகத்தையம் திரைப்படத்துறை பிரவேசத்திற்குள் ஊக்குவித்தல், பாடசாலை மாணவர்களுக்கு திரைப்படத்துறை பற்றிய கலைத்துவமான மற்றும் தொழில்நுட்ப ரீதியான அறிவை வழங்குதல், இலங்கைத் திரைப்படத்துறைக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட போக்கை வழங்குதல் மற்றும் இலங்கை சினிமா ரசிகர்களுக்கு “எங்கள் புதிய கதைகள்” கொண்ட சினிமாவை வழங்குவது என்பன இச் செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திரைப்பட விழாவுடன் இணைந்து தேசிய இளைஞர் குறும்படப் போட்டியும் நடைபெறவுள்ளது. பாடசாலைகள் மற்றும் 18-27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்படும். இப்போட்டிக்கான குறும்படங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை பெப்ரவரி 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை இணையவழியூடாகச் (ஒன்லைனில்) சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு திரைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி 2023 மே 23 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்தப் போட்டி தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் “தேசிய இளைஞர் தளம்” இணையதளம் மற்றும் ஊடகங்களில் விரைவில் வெளியிடப்படும்.

போட்டியாளர்கள் தயரிக்கும் குறும்படங்கள் புதிய தலைமுறையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்களால் மதிப்பிடப்படும்.

குறும்படங்கள் மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களின் கண்காட்சி, குழு கலந்துரையாடல்கள், Masterclass நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.
திரைப்பட இயக்குனர் மஹேல ஹெட்டியாராச்சி தேசிய ஒருங்கிணைப்பாளராக செயற்படுகின்றார்.

இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்களின் கனவை நனவாக்கும் பயணத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சாதகமான பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here