துருக்கியில் 7.5 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச செய்தி தெரிவிக்கின்றன.