யூடியூப் செயலியின் முகப்பு இன்று செயலிழந்த நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அல்பபெட் நிறுவனம் (GOOGL.O)தெரிவித்துள்ளது.
உங்கள் அனைத்து வீடியோ தேவைகளுக்கும் YouTube முகப்புப்பக்கம் வழமைக்கு திரும்பும் என யூடியூப் டுவிட்டரில் தெரிவிந்திருந்தது.
இதேவேளை, மெட்டா நிறுவனத்தின் (META.O) சமூக ஊடக செயிலிகள் மற்றும் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டுவிட்டர் உள்ளிட்டவையும் செயலிழந்தது,
மெட்டாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.