பிரபல பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி, ஊழியர்களில் 7,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா, உக்ரைன் போரின் தாக்கத்தால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக செலவினங்களை குறைக்கும் விதமாக பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி, பல்வேறு நாடுகளில் உள்ள தங்களது நிறுவன ஊழியர்களில் சுமார் 7,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக டிஸ்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது டிஸ்னி நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 3% ஆகும். உலகம் முழுவதும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் 2.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 2020ம் ஆண்டு 30,000 ஊழியர்களை டிஸ்னி நிர்வாகம் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது