follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்கடும் குளிருக்கு மத்தியில் 100 மணிநேரம் கடந்த நிவாரணப் பணிகள்

கடும் குளிருக்கு மத்தியில் 100 மணிநேரம் கடந்த நிவாரணப் பணிகள்

Published on

துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொடங்கிய நிவாரணப் பணிகள் தற்போது நூறு மணிநேரத்தை தாண்டிவிட்டன. ஆனால் இதுவரை நிவாரணப் பணிகள் முடிக்கப்படவில்லை.

எனினும் சுமார் 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல். வாகனங்கள் இல்லாததாலும், சாலைகள் சேதமடைந்ததாலும், நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000-ஐ தாண்டியுள்ளது. ஆனால், இதுவே இறுதிப் புள்ளி விவரமாக இருக்காது என்று நிவாரணப் பணியாளர்களும் கூறுகின்றனர். எனினும், கடும் குளிரான காலநிலை காரணமாக நிவாரணப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் மற்றுமொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை “நூற்றாண்டின் பேரழிவு” என்று அந்நாட்டு ஜனாதிபதி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...