follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு"தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதில் சுதந்திரம் இருக்கின்றது?"

“தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு எதில் சுதந்திரம் இருக்கின்றது?”

Published on

இன்று தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லையே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுபியிருந்தார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“… கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி நாம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் 75வது சுதந்திர தின விழாவன்று கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏனெனில் இலங்கையில் எந்தவொரு நபருக்கும் சுதந்திரம் இல்லை அதுதான் உண்மை. 1948ம் ஆண்டு சுதந்திரத்தினை பெற்றுக் கொள்வதில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அனைத்து மக்களும் பாடுபட்டனர். அதனை இங்குள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதையே இந்த சபையில் உள்ள அநேகரும் கூறுகின்றனர். என்றாலும் நூற்றுக்கு இருபத்தைந்து வீத தமிழ்-முஸ்லிம் மக்களது உரிமைகளை பெரும்பான்மையான 75% கொண்ட சிங்களவர்களின் கையில் கொடுத்து விட்டுத்தான் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர்.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் 75 வருட காலமாக சுதந்திரம் இல்லை என்பது தான் உண்மை. சிங்கள மக்களுக்கு பொருளாதார ரீதியில் சுதந்திரம் இருந்தாலும் அரசியல் சுதந்திரம் இல்லை அதாவது சுதந்திரம் இல்லை அது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஆனால் தமிழ் – முஸ்லிம் மக்களை எடுத்துக் கொண்டால் எங்களுக்கு பொருளாதார சுதந்திரமும் இல்லை அரசியல் சுதந்திரமும் இல்லை என்றேகூர வேண்டும். அதுக்கு உதாரணங்கள் தேவையில்லை. சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றுக்கு முன்னர் தேரர்கள் சிலர் வந்து இலங்கையில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் பிரதியை எரித்தனர்.

நான் சும்மாதான் கேட்கிறேன். ஒரு வெறும் பத்திரிகை தாள் ஒன்றினை முஸ்லிம் மௌலவி ஒருவர் கொண்டு வந்து பாராளுமன்ற முன்பாக எரித்திருந்தால்? இப்போதைக்கு அந்த மௌலவியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள். இதை ஒரு இந்து பூசாரி ஒருவர் பழைய கார்போட் துண்டு ஒன்றினை கொண்டு வந்து பாராளுமன்ற முன்பாக எரித்திருந்தால், இந்த நாடு அவரை இப்போதைக்கு சிறையில் அடைத்திருக்கும். கத்தோலிக்க தலைவர் ஒருவருக்கும் இதே கதிதான். இலங்கையின் மேன்மையான ஒரு அரசியல் திருத்தத்தினையே அன்று எரித்தனர். அந்த அரசியல் சுதந்திரம் சிங்கள மக்களுக்கு உண்டு. அதனால் தான் அவர்கள் எரித்தனர். அங்கு வந்திருந்த தேரர்கள் குழுவுடன் இலங்கை வாழ் அனைத்து சிங்கள மக்களையும் நாம் ஒப்பிடுவதில்லை, அது இலங்கை வாழ் சிங்கள மக்கள் அனைவரதும் நிலைப்பாடு அல்ல அன்று வெளியானது. அது மகிந்தவின் முதுகில் ஏறி அரசியல் செய்த குழுவின் வேலை. அடுத்த தேர்தலுக்கு அவர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. அதுதான் இந்தத் தொனியில் களமிறங்கியுள்ளனர்…” எனத் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...