3.9 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி

382

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுமார் 3.9 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2023 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம், விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்குவதற்கும் பிரதிகூலங்களை குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயன்றவரை பணத்தைப் பாதுகாக்கும் வகையில், அரிசி கொள்வனவு வேலைத்திட்டத்தை இவ்வருடம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் அதிக விளைச்சம் கிடைக்கும் என நம்புகிறோம். இதன் விளைவாக, விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல் 100 ரூபாவுக்கு கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here