follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுமைத்திரி ஆட்சியில் யானை இடமாற்றம் : விசாரணைகள் ஆரம்பம்

மைத்திரி ஆட்சியில் யானை இடமாற்றம் : விசாரணைகள் ஆரம்பம்

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமான முறையில் மூன்று யானைகளை இடமாற்றம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கந்துல, மஞ்சுளா மற்றும் காஞ்சனா ஆகிய மூன்று யானைகளும் சட்டவிரோதமான முறையில் ஒப்படைக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் யானைகளை தனது காவலில் வைத்திருந்த சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்ற நபரிடம் விலங்குகளை ஒப்படைத்தமை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி உரிய விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் இருந்து 33 இலட்சம் ரூபாவிற்கு யானைக்குட்டியை இறக்குமதி செய்ததில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இச்சம்பவம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று யானைகளும் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு...

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...