follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுதடுப்பூசி பெற்றவர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டை

தடுப்பூசி பெற்றவர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டை

Published on

முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட வௌிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காக டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் குறியீட்டின் அடிப்படையில் தொடர்புடைய டிஜிட்டல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் குறித்த டிஜிட்டல் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த அட்டைகளை விநியோகித்தல் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...