follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஹபரணையில் இசை நிகழ்ச்சிக்கு தடை

ஹபரணையில் இசை நிகழ்ச்சிக்கு தடை

Published on

ஹபரணை யானை வழித்தடத்திற்கு அருகில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்கு தடை விதித்து ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹபரணை யானை வழித்தடத்திற்கு அருகில் இன்று(17) முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் இசை நிகழ்ச்சி தொடர்பில் பல்வேறு சூழல் ஆர்வலர்களால் இன்று (17) ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொலிஸ் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு பின்வரும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அங்கு 2031/2007 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கையின் படியே மேற்படி Deep Jungle Music and Cultural Festival விழாவை நடத்த வேண்டும் எனவும், மேற்படி சுற்றறிக்கையின்படி நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, 20 பேர் கொண்ட பொலிஸ் குழு மற்றும் 10 பேர் கொண்ட வனஜீவராசிகள் அதிகாரி குழுவை நியமிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதே நேரத்தில், குறித்த நிகழ்வு நடைபெறும் எல்லையைத் தாண்டி அதனை நடத்தாதிருத்தல், ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி எழுப்பிகள் பயன்படுத்தாமல், மேற்குறிப்பிட்ட விழாவை நடத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேற்படி 2031/2007 பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கையை மீறினால், சம்பந்தப்பட்ட ஒலி உபகரணங்களை உடனடியாக கைப்பற்றி, 2031/2007 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கும் நிபந்தனையுடன் ஹபரணை பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...