follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது சீர்குலைக்க அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் சட்டத்தரணி இசுறு பாலபட்டபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாட்டின் சட்டத்திற்கமைய, மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டுமெனவும், இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டின் ஒரு பகுதியான இதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் அல்லது பாராளுமன்றமானது தேர்தலுக்கான வளங்களை ஒதுக்குவதை தடுத்தல் மற்றும் இலங்கை மக்கள் தங்களது பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை தெரிவு செய்வதை தடுத்தல் போன்ற தேர்தலை தடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனவும் BASL எச்சரித்துள்ளது.

எனவே அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு, அரசாங்கம் மற்றும் அனைத்து அரச அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...