சட்டத்தினுடன் மோதுபவர்களுக்கு தண்டனை நிச்சயம்

277

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் வேட்பாளர்களின்,அமைப்பாளர்களின் மனநிலையை சீர்குலைப்பது, தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது என்பது அரசியல் அல்ல எனவும், இது ஓர் அரசியல் தந்திரம் என்ற போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான தேர்தல்களை தடுத்து நிறுத்தும் சதியை மக்கள் சக்தியுடன் முறியடித்து, இந்த சதியில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல், இத்தேர்தலில், மக்கள் மாற்று அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, இரண்டாவது தடவையாகவும் வங்குரோந்து நிலையை உருவாக்குவதாக அத்தெரிவு அமையாதிருக்க வேண்டும் எனவும், தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்தும் கோட்டாபய ராஜபக்ச ஏற்படுத்திய குழப்பத்திலிருந்தும் விடுபட மாற்று அணி தீர்வு என்ற பெயரில் மீண்டும் முன்வந்துள்ளதாகவும் ,இந்நேரத்தில் நாட்டுக்கு டொலர்களை பெறும் திறமையான குழுவே தேவைப்பாடாக இருப்பதால் மக்கள் சரியான முடிவை எடுக்காவிட்டால் நாடு மேலும் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ராஜபக்சர்களே என அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது ஐக்கிய மக்கள் சக்தி அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அவர்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும், இவ்வாறான திருடர்களிடம் சிக்காமல், எவ்வாறேனும் தேர்தலை நடத்தி
நாட்டை திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here