follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமினிப்பே இடதுகரை கால்வாய் நிர்மாணப் பணியை பார்வையிட்ட ஜனாதிபதி

மினிப்பே இடதுகரை கால்வாய் நிர்மாணப் பணியை பார்வையிட்ட ஜனாதிபதி

Published on

பல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும் மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி, அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் அதன் பயனை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (19) மினிப்பே இடதுகரை கால்வாய் நிர்மாணப் பணியை பார்வையிட்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இத்திட்டத்தின் எதிர்காலப் பணிகளுக்கு இலங்கையிலுள்ள பொறியியல் பீட மாணவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மின்சாரத் தேவையின் உச்ச நிலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரன்தம்பே நீர்மின் நிலையத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் சந்தர்ப்பங்களில், இடது மற்றும் வலதுகரை கால்வாய்களுக்கு நீரை வழங்குவதற்கு தற்போதுள்ள மதகுகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக மினிப்பே விவசாய நிலங்களுக்கு அதிக நம்பகத்தன்மையுடனும், தொடர்ச்சியாகவும் நீர் வழங்குவதற்காக மினிப்பே அணையை 3.5 மீட்டர் உயர்த்துதல் மற்றும் 74 கிலோமீட்டர் நீளமுள்ள மினிப்பே இடதுகரையின் பிரதான கால்வாயை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

மினிப்பே அணைக்கட்டு புனரமைக்கப்பட்டதன் பின்னர், விவசாயிகளுக்கு தொடர்ந்து நீரைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு ஏற்படுவதுடன் , மினிப்பே இடது கரையின் இருபுறங்களிலும் உள்ள பயிர்ச்செய்கை நிலங்கள் சிறு மற்றும் பெரு போகங்கள் இரண்டிலும் தடையின்றி விவசாயம் செய்ய முடியும். இதன் மூலம் 15,000 விவசாய குடும்பங்கள் பயனடைகின்றன.

இத்திட்டத்திற்கான செலவு 3,000 மில்லியன் ரூபாவாகும் மற்றும் சீனா Gexhouba Group Company Limited (CGGC) நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக...

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...