சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ‘பயண அட்டை’

316

இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பயண அட்டை (Travel Card) வழங்கல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றது.

இந்த அட்டையை வழங்கிய பின்னர், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாத் துறையில் பல்வேறு சேவைகளை வழங்குபவர்கள், சுற்றுலாப் பயணிகளைக் கையாள்வதில் சிறப்புச் சலுகைகளைப் பெறுவார்கள்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, தாங்கள் கொண்டு வரும் டாலர்களை வங்கியில் நேரடியாக மாற்றி, சுற்றுலாப் பயணிகள் இந்த அட்டை மூலம் இலங்கையில் பொருட்களையும் சேவைகளையும் பாதுகாப்பாகப் பெறுவது போன்ற தரமான சேவைகளைப் பெற முடியும்.

NDB ((National Development Bank) உடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, NDB சிரேஷ்ட உப தலைவர் சஞ்சய் பெரேரா, உப தலைவர் செயான் ஹமீட், உதவி உபதலைவர் கார்டி அஷான் விக்கிரமநாயக்க மற்றும் NDB கொள்ளுப்பிட்டி கிளையின் முகாமையாளர்குரேஸ் சப்பிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here