உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வங்கியின் மீது அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, கிரெடிட் கார்டு ஜாம்பவனாக வர்ணிக்கப்படும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தை பல ஆண்டுகள் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரிய அஜய் பங்கா தற்போது தனியார் பங்கு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அமெரிக்காவின் பரிந்துரையாக அஜய் பங்காவின் பெயரை ஜோ பைடன் பரிந்துரைத்தாலும், உலக வங்கியின் அடுத்த தலைவரை அதிகாரப்பூர்வமாக நியமிப்பது என்பது வங்கியின் நிர்வாகத்திற்கு உட்பட்டது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.