follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP1மஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க யோசனை

மஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க யோசனை

Published on

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து பிரதமர் பதவியை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார்.

“..பிரதமர் பதவியை மாற்றும் திட்டம் உள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் உள்ள நண்பர்கள் எங்களிடம் அத்தகைய யோசனையை முன்வைத்தனர்.

தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் திட்டம் இருப்பதாக..

தலைவலிக்கு தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது…”

LATEST NEWS

MORE ARTICLES

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” – நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்...

ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும்

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல்...