follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுமார்ச் 8, 9 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்

மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்

Published on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை(27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

மார்ச் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களம், வௌிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாமர சம்பத்திற்கு பிணை

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை...

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனத்திற்கு

கனமழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மழை...

சுமார் 36 அரசு நிறுவனங்களின் மோசடி அம்பலமானது

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 36 அரச நிறுவனங்கள், வாரியங்கள், ஆணையங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய நிதி அறிக்கைகளை...