follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉலகம்மத தீவிரவாதிகளின் சதியால் ஈரானிய சிறுமிகளுக்கு விஷம் கலந்த உணவு 

மத தீவிரவாதிகளின் சதியால் ஈரானிய சிறுமிகளுக்கு விஷம் கலந்த உணவு 

Published on

ஈரானில் உணவில் விஷம் கலந்து சிறுமிகளுக்கு உணவளிக்கவும், அவர்களின் கல்வியை சீர்குலைக்கவும், பாடசாலைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடவும் சதி நடப்பதாக ஈரான் அரசு தெரிவிக்கின்றது.

ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சதிப்புரட்சியின் பின்னணியில் ஒரு மத தீவிரவாதிகள் உள்ளனர். இந்த சதி தெற்கு ஈரானில் உள்ள புனித நகரமான கோமில் இருந்து உருவானது.

மத நகரமான கோம் மற்றும் பிற நகரங்களில் பெண் மாணவிகள் தொடர் விஷம் வைத்து கொல்லப்பட்டது “வேண்டுமென்றே” நடந்துள்ளதாக ஈரானின் துணைக் கல்வி அமைச்சர் யூன்ஸ் பனாஹி கூறுகையில் தெரிவித்திருந்தார்.

அனைத்து பாடசாலைகளையும் குறிப்பாக பெண்கள் பாடசாலைகளை மூட வேண்டும் என்று சிலர் விரும்புவது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனக் கலவைகள் போர் இரசாயனங்கள் அல்ல என்பதும், விஷம் கலந்த மாணவர்களுக்கு அவசரிய சிகிச்சைகள் தேவையில்லை என்பதும், பயன்படுத்தப்பட்ட விஷங்களில் அதிக சதவீதம் சிகிச்சை அளிக்கக்கூடியது என்பதும் தெரியவந்துள்ளதாக அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் சுகாதாரக் குழுவின் உறுப்பினரான Homayoun Sameh Najafabadi, Didbaniran எனும் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், Qom மற்றும் Borujerd பாடசாலைகளில் மாணவிகளுக்கு விஷம் கொடுப்பது உள்நோக்கம் கொண்டது என்பதை உறுதிப்படுத்தினார்.

முன்னதாக பாடசாலை மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை வதந்திகள் என்று கல்வி அமைச்சர் யூசுப் நூரி கூறியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்களுக்கு “அடிப்படை நோய்கள்” இருப்பதாகக் கூறி இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை, மேற்கு ஈரானில் உள்ள போருஜெர்டில் உள்ள ஒரு உயர்நிலைப் படாசாலையில் 50 மாணவிகள் மீண்டும் விஷம் அருந்தப்பட்டதாக லொரெஸ்தானின் துணை ஆளுநர் மஜித் மொனெமி தெரிவித்தார்.

ஈரானில் மாணவர்களின் தொடர் விஷம் டிசம்பரில் மத நகரமான கோமில் தொடங்கி பல நகரங்களுக்கும் பரவியது.

நச்சுத்தன்மைக்கான காரணத்தை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை, ஆனால் சில உள்ளூர் ஊடகங்கள் இது பெண்கள் பாடசாலைக்கு செல்வதைத் தடுக்க விரும்பும் மத வெறியர்களின் செயலாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

நன்றி : IRAN INTERNATIONAL 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...