ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக் குழு நியமிப்பு

325

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஐந்து தடயவியல் மற்றும் சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நியமித்தார்

இதன்படி, பேராசிரியர் அசேல மெண்டிஸ், பேராசிரியர் டி.சி.ஆர்.பெரேரா, பேராசிரியர் டி.என்.பி.பெர்னாண்டோ, கலாநிதி சிவசுப்ரமணியம் மற்றும் கலாநிதி ருவன்புர ஆகியோர் விசாரணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 14ஆம் திகதி இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் இருந்ததால், அதை விரிவாக ஆய்வு செய்து மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக குறித்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here