விவசாய அமைச்சிற்குள் விசேட புலனாய்வுப் பிரிவொன்று இல்லாத காரணத்தினால் குறித்த பிரிவை நிறுவுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சிற்குள் 13 மேலதிக செயலாளர்கள் பணிபுரிவதாகவும் சிலர் விவசாய மற்றும் நிர்வாக சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுக்கு கடமைகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் உட்பட அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்ட சில முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பிரிவு இல்லாதது மிகவும் கவலைக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, இதற்கு மாற்றாக அமைச்சில் தற்போது மேலதிக செயலாளர் மற்றும் தேவையான பணியாளர்களை நியமித்து பிரிவை நிறுவுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.