அண்மையில் துருக்கியில் பதிவான பாரிய நிலநடுக்கங்களினால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மொத்த புனரமைப்பு பணிகளுக்காக செலவாகும் நிதி, இதனை விடவும் இரு மடங்காக அதிகரிக்கலாமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 06ஆம் திகதி துருக்கி மற்றும் சிரிய எல்லையில் பதிவாகிய 7.8 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவிலான பாரிய இரு நிலநடுக்கங்களிலும் சிக்கி 44,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.