சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பு நாட்டில் போதுமானதாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுபோக விவசாய செய்கைக்கு 35,000 மெற்றிக் தொன் பசளை தேவைப்படுவதாக இலங்கை கொமர்ஷல் உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.
உழவர் அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறுபோகத்திற்கு 55,000 மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டில் உள்ளதாகவும், மேலும் 20,000 மெற்றிக் தொன்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சிறுபோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.