அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் வெற்றியடைந்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு நாளை (02) காலை 7 மணியுடன் நிறைவடைவதாக அதன் தலைவர் நிரோஷன் கோரகன தெரிவித்தார்.
சிறிதளவு தாமதம் ஏற்பட்டாலும் துறைமுகத்தின் அன்றாட நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.