வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்பும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியே.

335

ராஜபக்ச அரசாங்கமும், ராஜபக்ச நிழல் அரசாங்கமும் இந்நாட்டு மக்களின் இயல்பு வாழக்கையை சீரழித்து விட்டதாகவும், எல்லா வகையிலுமான வரிகளும் அதிகரிக்கப்பட்டு மின்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண மக்கள் முதல் பாடசாலை பிள்ளைகள் வரை அனைவரும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் இவ்வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பொருளாதாரத்தை விரிவடையச் செய்து, மனிதாபிமான முதலாளித்துவ அமைப்பில் செல்வப் பெருக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு, சமூக ஜனநாயக கட்டமைப்பில் வளங்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டு நாட்டில் நீதி நியாயம் கோலோச்சும் அரசாங்க பொருளாதார முறைமை ஏற்படுத்துவோம் என்ற எதிர்பார்பையே மக்களுக்கு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனிதாபிமான முதலாளித்துவமும் சமூக ஜனநாயகமும் மட்டுமே இந்நேரத்தில் நாட்டிற்கு ஒரே வழி, ஒரே ‘பதில்’ எனவும், அனைவருக்கும் பயனளிக்கும் வளமான சகாப்தத்தை உருவாக்கி, கிராமத்தை கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பும், நகரத்தைக் கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய எண்ணக்கருவாகும் எனவும், இதற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஒரு நாடாக,தொழில்நுட்பம், அறிவு மற்றும் புதிய முறைமைகளின் அடிப்படையிலையே நாம் முன்னேற வேண்டும் எனவும், அறிவு மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் ஊடாக ஏற்றுமதி ஊக்குவிப்பு முதலீட்டுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சமுத்திரங்களை மையமாகக் கொண்ட நீலப் பொருளாதாரம் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பசுமைப் பொருளாதார அமைப்புக்கு மாறுவதன் மூலம் காபன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் ஊடாக உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆதரவை எமது நாடு பெற முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டு இளைஞர்களை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான அறிவாற்றலில் வலுப்படுத்தி வறுமையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here