வெல்லம்பிட்டிய வீதி தற்காலிகமாக பூட்டு

598

இன்று(04) காலை 9.00 மணி முதல் நாளை (05) நண்பகல் 12.00 மணி வரை வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவ சந்தி வரையான வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேற்பார்வையில் தனியார் நிறுவனத்தினால் நிலத்தடி நீர் குழாய் அமைப்பொன்று அமைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொதுமக்கள் முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here