உமா ஓயா திட்டம் ஜூன் மாதம் நிறைவுக்கு

329

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் அதனை மக்களிடம் கையளிக்க முடியும் என நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உமாஓயா கரடகொல்ல மின் திட்டம் மற்றும் அலிகொத்தரா நீர்த்தேக்கத்தின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் பணிகள் 2015 ஆம் ஆண்டிலேயே நிறைவடையவிருந்த போதிலும், கொவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களால் அதன் பணிகள் தாமதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், இத்திட்டத்தின் 97 வீதமான பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாகவும், அது மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here