இந்திய முட்டைகள் நாட்டை வந்தடைவதில் மேலும் தாமதம்

108

புதுடில்லியிலுள்ள கால்நடைப் பிரிவு ஊடாக கிடைக்க வேண்டிய அறிக்கை தாமதமடைவதால் முட்டைகளை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைவதில் மேலும் தாமதம் ஏற்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய அனுமதி கிடைத்தவுடன் 2 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலம் முடிவடையும் வரை பல கட்டங்களாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here