இலங்கை – IMF பணிக்குழாம் உடன்படிக்கை மார்ச் 20இல் பரிசீலிப்பு

281

இலங்கை அதன் அனைத்து பிரதான கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதத்தை பெற்றுள்ளதால், கடந்த செப்டம்பர் 01 எட்டப்பட்ட பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தின் கீழ், நிதி வசதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 20 இல் இடம்பெறும் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனைத்து பாரிய இருதரப்பு கடன் வழங்குநர்களின் நிதியியல் உறுதிப்பாட்டை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்திற்கான, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரமானது, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதியுதவியை ஊக்குவிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here