பெண் விமானிகளுடன் சென்ற விமானம்

747

இன்று (08) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெண் விமானிகள் மற்றும் பெண் பணியாளர்களை மட்டும் கொண்ட விமானக் குழு உறுப்பினர்களுடன் இன்று இந்தியாவின் திருச்சிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஏ-320 எயார்பஸ் ரக விமானம் அனுப்பப்பட்டதுடன், கப்டன் சாமிக்க ரூபசிங்க பிரதான விமானியாகவும், பிமாலி ஜீவந்தர துணை விமானியாக இருந்தார்.

இந்தியாவின் திருச்சிக்கு 67 பயணிகளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here