ஊழியர் பற்றாக்குறை – பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் பாதிப்பு

112

ஊழியர் பற்றாக்குறை காரணமாக நாளாந்த பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாத பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் நாளாந்த ரயில் ​சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் பற்றாக்குறையால் இலங்கை போக்குவரத்து சபையினூடாக சேவையை வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில் சாரதிகளின் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு ஓய்வு பெற்ற சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளபொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியதாகக் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபைக்கான சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here