ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

268

ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் , தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் இருவர் உயிரிழந்தமைக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் உபயோகிக்கப்படும் கண்ணீர்புகைக்குண்டுகள் காலாவதியானவை என்றும் , விஷத்தன்மையுடையவை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here