இரண்டு மாதங்களில் 1500 தனியார் மருத்துவமனைகள் பதிவு

375

பதிவு செய்யப்படாத 1500 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இரண்டு மாதங்களில் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறைக் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருந்தது

இதனால் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் சுகாதார அமைச்சில் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் பதிவு செய்யப்படாத சுமார் பத்தாயிரம் மருத்துவ நிறுவனங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபை அண்மையில் வெளியிட்டது.

2006 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தனியார் மருத்துவ நிறுவனப் பதிவுச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கையிலுள்ள அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here