இலங்கை-நியூசிலாந்து : முதல் டெஸ்டின் கடைசிப் போட்டி மழையால் தடை

302

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான இன்றைய ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.

நேற்று ஆட்டம் நிறுத்தப்படும் போது, ​​தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆட்டமிழக்காமல் இருந்த டாம் லாதம் 11 ஓட்டங்களும் கேன் வில்லியம்சன் 7 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ஓட்டங்களையும், பதிலுக்கு நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 373 ஓட்டங்களையும் பெற்றுள்ளது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 302 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அதன்படி நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 285 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் நியூசிலாந்து அணி இன்று 257 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here