வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்பு

773

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் திருத்தப்பணிகள் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்படுவதால், பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு கால தாமதம் ஏற்பட கூடும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here