இந்திய நிதி உதவியின் கீழ் மலையகத்தில் தனி வீட்டு திட்டம்

280

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்படிக்கை இன்று(13) இந்திய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 9 இலட்சத்து 50,000 ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 இலட்சம் ரூபா அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், இது முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் பத்தாயிரம் வீட்டு திட்டமும் வெகுவிரைவில் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here