நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக ராம் சந்திர பௌடேல் பதவியேற்பு

240

நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக, நேபாள காங்கிரஸ் கட்சியின் ராம் சந்திர பௌடேல் பதவியேற்றார்.

நேபாளத்தின் தற்போதைய ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து
அவருக்கு பதிலாக அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், 64.13 சதவீத வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேபாள ஜனாதிபதி மாளிகையில் 3ஆவது ஜனாதிபதியாக சந்திர பௌடேல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here