சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய திட்டம்

191

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் 3வது முறையாக தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ளும் பின்னணியில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரஷ்யாவுக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள அரசு விழாவில் சீன ஜனாதிபதி விருந்தினராக பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விசேட மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here