நிதி கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம்

99

தேர்தலுக்கான அச்சிடும் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை வழங்கக்கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் திறைசேரியின் செயற்பாட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தின் நகலை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

அச்சு நடவடிக்கைகளுக்கான பணத்தை பெற்றுத்தருமாறு கோரி இதற்கு முன்னர் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அரச அச்சகர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here