அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.