follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கம்மன்பில கோரிக்கை

இலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கம்மன்பில கோரிக்கை

Published on

கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் குழு தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான நிலையத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இரண்டு C17 Globemaster விமானங்கள் மூலம் நாட்டிற்கு வந்திருந்ததுடன், அந்த தூதுக்குழுவில் அமெரிக்க FBI நிறுவனத்தின் பணிப்பாளரும் உள்ளடங்கியுள்ளாரா என்பது தொடர்பிலும் உறுதிப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

குறித்த நபர்களை குடிவரவு குடியகல்வு மற்றும் சுங்க அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என இலங்கையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் எவரேனும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்களா என்ற தகவலும் கடிதத்தில் கோரப்பட்டுள்ள விடயங்களில் உள்ளடங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.